உலக செய்திகள்

கனடா பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை + "||" + Indian man sentenced to eight years in prison in Canada for causing bus crash that killed 16 people

கனடா பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை

கனடா பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை
கனடாவில் பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டவா,

கனடாவின் ஒட்டாவா பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ம்தேதி ஜூனியர் ஹாக்கி வீரர்கள் உட்பட 29 பேர் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பஸ் நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே கட்டுப்பாட்டினை மீறி தாறுமாறாக வந்த டிரக், பஸ்சின் மீது  வேகமாக மோதியது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து தொடர்பாக டிரக் ஒட்டுனர் ஜஸ்கிரத் சிங் சித்து (இந்தியர்) மீது பாதிக்கப்பட்டவர்களின்  குடும்பத்தினர் மெபோர்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நெடுஞ்சாலையில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாகவும், அவர் நினைத்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்க முடியும் எனவும் குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை முடிவைடைந்த நிலையில், நீதிபதி இனிஸ் கார்டினல்  தீர்ப்பு வழங்கினார். நீதிபதி தனது தீர்ப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:  இந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த வழக்கின் முக்கிய ஆவணமான, விபத்து நடந்த பகுதியின் தடயவியல் நிபுணர்கள் அளித்த ஆதாரங்களில், எவ்வித இயற்கை காரணிகளும் இவ்விபத்துக்கு காரணம் இல்லை என தெரிய வந்துள்ளது.  சித்து நெடுஞ்சாலையின் குறியீடுகளை சரியாக பின்பற்றப்படவில்லை. 

இவ்விபத்தை சித்துவால் தடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. நெடுஞ்சாலைகளின் வளைவுகளில் இருக்கும் பெரிய குறியீடுகளை கவனிக்காமலும், ஒளிரும் விளக்குகளை கவனிக்காமலும் அலட்சியமாக வாகனம் ஓட்டியுள்ளார். இதனால் இந்த கோரச்சம்பவம் நடந்திருக்கிறது. எனவே விபத்துக்கு காரணமான சித்துவிற்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. ரூ.3 கோடி மோசடி வழக்கு: தொண்டு நிறுவன தலைவர், உறுப்பினருக்கு தலா 5 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
ரூ.3 கோடி மோசடி வழக்கில் தொண்டு நிறுவன தலைவர் மற்றும் உறுப்பினருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
2. தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் கனடா பிரதமர்
கனடா நாட்டில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தை கனடா பிரதமர் இன்று தொடங்கினார்.
3. கனடாவை தாக்கியது ‘டோரியன்’ புயல்: 4.5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின
கனடாவை டோரியன் புயல் தாக்கியது. இதனால் அங்குள்ள 4.5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
4. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
5. போலீசாருக்கு எழுதிக்கொடுத்த உறுதிமொழி பத்திரத்தை மீறிய இரட்டை சகோதரர்களுக்கு 355 நாட்கள் சிறை தண்டனை
திருட்டு, அடிதடி உள்பட 16 வழக்குகளில் தொடர்புடைய இரட்டை சகோதரர்கள் போலீசாருக்கு எழுதிக்கொடுத்த உறுதிமொழி பத்திரத்தை மீறியதால் அவர்களுக்கு 355 நாட்கள் சிறை தண்டனை விதித்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டார்.