உலகின் ‘நம்பர் 1’ விமான நிலையம்


உலகின் ‘நம்பர் 1’ விமான நிலையம்
x
தினத்தந்தி 6 April 2019 6:46 AM GMT (Updated: 6 April 2019 6:46 AM GMT)

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உலகின் ‘நம்பர் 1’ விமான நிலையம்

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் சிறந்த விமான நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

‘ஸ்கைடிராக்ஸ்’ என்ற இங்கிலாந்து விமானத் துறை ஆலோசனை நிறு வனம், 1.30 கோடிக்கும் மேற்பட்ட பயணிகளிடம் நடத்திய ஆய்வின் முடிவில் இதனைத் தெரிவித்தது.

இந்த விருது தொடங்கப்பட்ட 20 ஆண்டுகளில் சாங்கி விமான நிலையம், இதுவரை 10 முறை உலகின் தலைசிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாங்கி விமான நிலையம் தொடர்ந்து வெல்லும் 7-வது விருது ஆகும்.

உலகின் சிறந்த விமான நிலையங்கள் வரிசையில் டோக்கியோ சர்வதேச விமான நிலையம் இரண்டாவது இடத்தையும், தென்கொரியாவின் இஞ்சியான் சர்வதேச விமான நிலையம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

இதற்கிடையே, சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு விரிவாக்கத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.


Next Story