தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி


தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
x
தினத்தந்தி 18 April 2019 5:52 AM GMT (Updated: 18 April 2019 5:52 AM GMT)

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.

தைபே, 

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. 

இதனால், மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறினர். 30 நொடிகள் வரை நிலநடுக்கம் நீடித்ததாக அங்குள்ள மக்கள் கூறினர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.01 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தற்போது வரை தகவல் எதுவும் வெளிவரவில்லை.  கடந்த 1999 ஆம் ஆண்டு தைவானில், 7.6 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 2,297 பேர் பலியாகினர். 9 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.

Next Story