உலக செய்திகள்

அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதியதால் பரபரப்பு + "||" + The F-16 'fighter aircraft in the US collapsed on the building

அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதியதால் பரபரப்பு

அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதியதால் பரபரப்பு
அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உள்பட 6 பேர் காயத்துடன் தப்பினர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் விமானப் படையின் கீழ் தேசிய விமான காவல் படை செயல்பட்டு வருகிறது. இந்த படைக்கு ‘எப்-16’ ரக போர் விமானம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு விட்டு, கலிபோர்னியா மாகாணம், மோரேனோ பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள மார்ச் ஏர் ரிசர்வ் தளத்துக்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு திரும்பிக்கொண்டிருந்தது.


அப்போது அந்த விமானம் சற்றும் எதிர்பாராத விதத்தில் அந்தப் பகுதியில் அமைந்துள்ள சேமிப்புக்கிடங்கு நிறுவன கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் விமானி மட்டுமே பயணம் செய்ததாகவும், அவர் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், உள்ளூர் போலீசாரும் விரைந்து சென்று, அந்த விமானியையும், காயம் அடைந்த மற்ற 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எந்திர பழுதுதான் விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்த விமான விபத்து, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வி - வடகொரியா தகவல்
அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வியில் முடிந்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
2. அமெரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
அமெரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் பலியாயினர்.
3. அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொலை
அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொல்லப்பட்டார்.
4. அமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
அமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
5. மத்திய பிரதேசத்தில் போர் விமானம் விழுந்து தீப்பிடித்தது; விமானிகள் உயிர் தப்பினர்
மத்திய பிரதேசத்தில் பயிற்சி போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிர் தப்பினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...