உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 20 May 2019 10:30 PM GMT (Updated: 20 May 2019 4:44 PM GMT)

*சீனாவில் குவாங்சி சுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் டைஸ் நகரில் ஒரு இரவு நேர மதுபான விடுதியின் கூரை இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் பலியானார்கள். 86 பேர் காயம் அடைந்தனர்.

*ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உளவு அமைப்பு அதிரடி சோதனை நடத்தியது. அதில், தலீபான் இயக்கத்துடன் தொடர்புடைய ஹக்கானி பயங்கரவாத குழுவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

*வியட்நாம் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. இதுவரை 34 மாகாணங்களில் பரவி விட்டது. இந்நோய் மேலும் பரவுவதை தடுப்பதற்காக இதுவரை 15 லட்சம் பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. இது, அந்நாட்டின் மொத்த பன்றி எண்ணிக்கையில் 5 சதவீதம் ஆகும். இத்தகவலை வியட்நாம் வேளாண் மந்திரி குயன் சுயன் குவோங் தெரிவித்தார்.


Next Story