இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போரிஸ் ஜான்சன் முன்னிலை


இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போரிஸ் ஜான்சன் முன்னிலை
x
தினத்தந்தி 14 Jun 2019 11:51 AM GMT (Updated: 14 Jun 2019 11:51 AM GMT)

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போரிஸ் ஜான்சன் முன்னிலை பெற்றுள்ளார்.

பிரெக்சிட் தொடர் வாக்கெடுப்பில் தொடர் தோல்வியை தழுவிய தெரசா மே, பிரதமர் பதிவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து கன்சர்வேடிவ் கட்சி சார்பில், அடுத்த பிரதமருக்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில் 114 மத்திய அமைச்சர்களின் ஆதரவை பெற்று, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான போரிஸ் ஜான்சன் முன்னிலையில் உள்ளார். எனவே இங்கிலாந்து பிரதமராவதற்கான வாய்ப்பு அவருக்கு அதிகம் உள்ளது. 

இந்நிலையில் ஏற்கனவே பிரெக்சிட் விவகாரத்தில் தெரசா மே உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக போரிஸ் ஜான்சன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story