உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 14 Jun 2019 11:00 PM GMT (Updated: 14 Jun 2019 4:54 PM GMT)

* விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான விசாரணை அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் தொடங்கும் என இங்கிலாந்து கோர்ட்டு தெரிவித்துள்ளது.

* சிரியாவில் இத்லிப் மற்றும் ஹமா மாகாணத்தில் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, அரசுப்படைகள் வான்தாக்குதலில் நடத்தின. இதில் பயங்கரவாதிகள் 21 பேர் கொல்லப்பட்டனர். அதே சமயம் இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேரும் பலியாகினர்.

* சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அமைந்துள்ள மாகாணங்களில் கடந்த ஒரு வார காலமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதற்கிடையில் மழை, வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

* ‘பிரெக்ஸிட்’ குழப்பங்களையும் மீறி இங்கிலாந்தில் முதலீடுகள் குவிந்து வருகிறது. இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளில், அதிக அந்நிய முதலீடுகளை பெறும் நாடாக இங்கிலாந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 

Next Story