உலக செய்திகள்

நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி + "||" + Gas pipeline explosion kills 10 in Nigeria

நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி

நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி
நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.
அபுஜா,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் தெற்கு பகுதியில் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள கோம்கோம் நகரில் எரிவாயு உற்பத்தி செய்யும் எரிசக்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அங்குள்ள எரிவாயு குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு எரிவாயு கசிந்து தீப்பிடித்தது.


கொழுந்துவிட்டு எரிந்த தீயில், பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் இந்த கோர விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நைஜீரியாவில் பயங்கரம்: கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; 65 பேர் பலி
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 65 பேர் பலியாகினர்.
2. நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து 50 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து தீ பிடித்து எரிந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.
3. நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள் 2 மாதங்களுக்கு பிறகு மீட்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள், 2 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.
4. நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலி - போகோஹரம் பயங்கரவாதிகள் அட்டூழியம்
நைஜீரியாவில் நடந்த மூன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
5. நைஜீரியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 35 பேர் சாவு
நைஜீரியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர்.