ஏர் இந்தியா விமானப் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொண்டவர் தற்கொலை


ஏர் இந்தியா விமானப் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொண்டவர் தற்கொலை
x
தினத்தந்தி 4 July 2019 9:22 AM GMT (Updated: 4 July 2019 9:22 AM GMT)

ஏர் இந்தியா விமானப் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்டார்.

லண்டன்

கடந்த ஆண்டு நவம்பரில், தான் ரோஹிங்யாக்களுக்காகவும், ஆசியர்களுக்காகவும் மனிதஉரிமைகளை மீட்கும் பொருட்டு வாதாடும் சர்வதேச வழக்கறிஞர் என்றும் தமக்கே கூடுதலாக மது வழங்க மறுப்பதாகவும் ஏர்இந்தியா விமானப் பணிக்குழுவைச் சேர்ந்த நபரை 50 வயதான சிமோனே பர்ன்ஸ் எனும் பெண் கடுமையான சொற்களால் பேசி காரி உமிழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் கைதானார். மதுபோதையில் அவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறி தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரிய சிமோனே, ஒரு சர்வதேச வழக்கறிஞர் என்பதற்கு வெட்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்த லண்டன் நீதிமன்ற நீதிபதி அவருக்கு 6 மாத சிறையும் 300 பவுண்டு இழப்பீடும் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், 2 வாரங்களுக்கு முன் விடுதலையான அவர், கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், கடந்த 1-ம் தேதி இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ்-ல் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story