குடியேற்றத் திட்டத்தில் திறமைசாலிகளுக்கான முன்னுரிமையை 57% அதிகரிக்க அமெரிக்கா திட்டம்


குடியேற்றத் திட்டத்தில் திறமைசாலிகளுக்கான முன்னுரிமையை 57% அதிகரிக்க அமெரிக்கா திட்டம்
x

மெரிட் அடிப்படையிலான குடியேற்றத் திட்டத்தில் திறமைசாலிகளுக்கான முன்னுரிமையை 57 சதவீதமாக அதிகரிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகரும், டிரம்பின் மருமகனுமான ஜேரட் குஷ்னர், அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய போது, கனடாவில் 53 சதவீதமும், நியூசிலாந்தில் 59 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 63 சதவீதமும், ஜப்பானில் 52 சதவீதமும் மெரிட் அடிப்படையிலான திறமைசாலிகளுக்கு குடியேற்றத்தில் முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

எனவே அமெரிக்கா 57 சதவீத முன்னுரிமையை அத்தகைய திறமைசாலிகளுக்கு வழங்கலாம் என ஆலோசனை வழங்கினார். இதுபோன்று திறமைசாலிகளை குடியேற அழைப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என ஜேரட் குஷ்னர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story