சீனாவில் சூறாவளி: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு


சீனாவில் சூறாவளி: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
x
தினத்தந்தி 11 Aug 2019 4:58 PM GMT (Updated: 11 Aug 2019 4:58 PM GMT)

கிழக்கு சீனாவில் சூறாவளிக்கு பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

பிஜீங்,

கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் எற்பட்ட சூறாவளி மற்றும் நிலச்சரிவு காரணமாக 32 பலியாகினர் மற்றும் 16 பேர் மாயமாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவை தாக்கிய இந்த சூறாவளிக்கு ‘லெக்கிமா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சூறாவளியானது  வெல்னிங் நகரத்தை இன்று பிற்பகல் தாக்கியது.

மழையின் காரணமாக ஒரு ஏரியின் தடுப்பு உடைந்து, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து அங்கிருந்த மக்களை அடித்து சென்றதாக கூறப்படுகிறது.

மாகாண வெள்ள தலைமையகத்தின் படி ஏறக்குறைய 1.08 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர் எனவும், ஜெஜியாங்கில் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூறாவளி காரணமாக 173,000 ஹெக்டர் பயிர்கள் மற்றும் 34,000 வீடுகள் சேதமடைந்தன. மீட்பு குழுக்கள் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

 வெள்ள நீர் மெதுவாக வடிய தொடங்கி உள்ளதாக  மீட்பு படையினர் கூறியுள்ளனர்.

லின்ஹாயில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க 16 மீட்பு குழுக்கள் முன்வந்துள்ளதாக  உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  ‘லெக்கிமா’  சூறாவளி ஷாண்டாங் தீபகற்பத்தின் கடற்கரை பகுதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இன்று கரையைக்கடக்கும் எனவும் அதனால் பலத்த மழை மற்றும் காற்று வீச கூடும் எனவும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்தது. 

சூறாவளி காரணமாக சுமார் 3,200 விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story