ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்


ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்
x
தினத்தந்தி 14 Aug 2019 4:35 AM GMT (Updated: 14 Aug 2019 4:35 AM GMT)

போராட்டம் தணிந்ததால், ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.

ஹாங்காங்,

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது.

ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.

இந்த நிலையில்,  இன்று அதிகாலை விமான நிலையத்தில் இருந்து போராட்டக்காரர்கள் பெரும்பாலானோர் சென்றனர். இதையடுத்து, ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. நள்ளிரவில் இருந்து 12-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டு சென்றதாக விமான நிலையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து புறப்பட இருக்கும் விமானங்களின் அட்டவணைப்பட்டியலும் வெளியிடப்பட்டு இருந்தது.  

விமான நிலையத்த்தில் சிறிதளவு போராட்டக்காரர்கள் மட்டுமே இருப்பதாக ஏ.எப்.பி செய்தியாளர் தெரிவித்தார். விமான நிலையத்தின் செக் இன் பகுதி வழக்கம் போல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், போராட்டக்காரகள் மீண்டும் விமான நிலையத்தை முற்றுகையிடுவார்களா? என்பது தெரியவில்லை. 

Next Story