உலக செய்திகள்

’பெரிதாக ஒன்றும் சம்பாதிக்க வில்லை’ ஒரு ஆபாச நடிகையின் ஆதங்கம் + "||" + Mia Khalifa claims she only made Rs 8.5 lakh as an adult film star: ‘I am definitely not proud, I am still working on acceptance’

’பெரிதாக ஒன்றும் சம்பாதிக்க வில்லை’ ஒரு ஆபாச நடிகையின் ஆதங்கம்

’பெரிதாக ஒன்றும் சம்பாதிக்க வில்லை’ ஒரு ஆபாச நடிகையின் ஆதங்கம்
கொடிகட்டி பறக்கும் ஆபாச நடிகையாக இருந்தும் ஒன்றும் சம்பாதிக்கவில்லை என மியா கூறி உள்ளார்.
லெபனானைச் சேர்ந்த  நடிகை மியா போர்ன் பிலிம் எனப்படும் ஆபாச  வீடியோக்களில் நடித்து பிரபலமானார். சன்னிலியோனுக்கு போட்டியாக இந்தியாவில் களம் இரக்கப்படுவதாக பரவலாக பேசப்பட்டது. அனால் இதுவரை அவர் களம் இறங்கவில்லை.

நடிகை மியா ஆபாச பட துறையில் மூன்று மாதங்களே பணியாற்றியுள்ளார்.  ஆனால், அந்த துறையைவிட்டு அவர் உடனடியாக வெளியேறிய நிலையில் இன்று வரை பலர் தேடி தேடி பார்க்கும் ஒரு ஆபாச  நடிகையாக இருக்கிறார்.  கடந்த 2018-ம் ஆண்டில் ஒரு ஆபாச இணைய தளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகையாக இவர் இருந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

லெபனானைச் சேர்ந்த  நடிகை மியா அக்டோபர் 2014-ல் தனது முதல் ஆபாசப் படத்தைத் தயாரித்தார். யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்ததாகவும், ஆனால் சில மாதங்களில் அவர் ஆபாச வலைதளத்தில்  முதலிடத்தைப் பெற்றதாகவும் தெரிவித்து உள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

மக்கள் நான் இந்த துறையில் நடித்ததன் மூலம் கோடி கோடியாக சம்பாதித்துள்ளேன் என்று நினைக்கிறார்கள். ஆனால், நான் மொத்தமாக அந்த துறையில் சம்பாதித்தது 12,000 டாலர்தான் (இந்திய  ரூபாய் மதிப்பில் ரூ.8.5  லட்சம்தான்) அந்த துறையில் நான் இருந்தது 3 மாதங்கள் மட்டுமே. அந்த  துறையை விட்டுவிட்டு வேறு வேலை தேடியபோது மிகவும் சிரமப்பட்டேன்”

மேலும், “நான் சிறிதுகாலம்தான் இத்துறையில் பணியாற்றினேன். ஆனால் காட்டுத்தீயாக என்னுடைய செயல்கள் பரவியிருக்கின்றன. நான்  விலகிய பின்னும் ஐந்து வருடங்கள் முதலிடத்தை பிடித்திருக்கிறேன். இதனால்தான் பலர் நான் இப்போதும் அந்த துறையில் இருப்பதாக நினைக்கிறார்கள் போல. இந்த துறையில் சட்டபூர்வ ஒப்பந்தங்களால் பெண்கள் சிக்கி கொள்கிறார்கள்.

எனது கடந்த காலத்திலிருந்து கேள்விக்குரிய ஒவ்வொரு தருணத்தையும்  வெளியிட  நான் தயாராக இருக்கிறேன். இதனால் அந்த விவகாரம் எனக்கு எதிராக பயன்படுத்தபடாது.

எனது ஆபாச படத்தால் நான் பல்வேறு இன்னல்களை அனுபவித்து உள்ளேன். ஐ.எஸ். எனக்கு கொலை மிரட்டல் அனுப்பியது. அவர்கள் எனது குடியிருப்பின் கூகிள் மேப் படத்தை எனக்கு அனுப்பினர். அதற்குப் பிறகு நான் இரண்டு  வாரங்கள் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தேன், ஏனென்றால் உண்மையிலேயே மரண பயம். ஒரு தலை துண்டிக்கப்பட்ட உடலில் என் புகைப்படத்தை  போட்டோஷாப் செய்து ‘நீங்கள் அடுத்ததாக இருப்பீர்கள்’ என்று வெளியிட்டனர் என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் போராட்டக்காரர்கள் என ஆபாச நடிகையின் படத்தை ட்விட் செய்த பாகிஸ்தான் தூதர்
காஷ்மீர் போராட்டக்காரர்கள் என ஆபாச நடிகை ஜானி ஜின்சின் புகைப்படத்தை இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் ட்விட் செய்தார்.