இலங்கையின் புதிய ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்


இலங்கையின் புதிய ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்
x
தினத்தந்தி 19 Aug 2019 7:13 PM GMT (Updated: 19 Aug 2019 7:13 PM GMT)

இலங்கையின் புதிய ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் சிக்கியவர் ஆவார்.

கொழும்பு,

இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனாநாயக் ஓய்வு பெற்றதையடுத்து புதிய ராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார். 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரின்போது ராணுவத்தின் 58-வது பிரிவுக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இலங்கை போரின்போது மனித உரிமை மீறப்பட்டதாக 2013-ம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சவேந்திர சில்வாவின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், சவேந்திர சில்வாவுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவை என சுட்டிக்காட்டியுள்ளது.


Next Story