உலக செய்திகள்

அமெரிக்கா: ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் பலி + "||" + 27-Year-Old Indian Student Drowns In US Lake

அமெரிக்கா: ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் பலி

அமெரிக்கா: ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் பலி
அமெரிக்காவின் ஓரிகன் பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் பலியானார்.
வாஷிங்டன், 

இந்தியாவை சேர்ந்த சுமேத் மன்னார் (27) அமெரிக்காவின் ஓரிகன் பகுதியிலுள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இவர்  அங்குள்ள கிரேடர் ஏரிக்கு கடந்த ஞாயிற்றுகிழமை சென்றுள்ளார். இந்த ஏரியின் ஜம்பிங் ராக் என்ற இடத்தில் இருந்து குதித்தார்.

ஏரியில் குதித்த சில நிமிடங்கள் ஆன பிறகும் அவர் மேற்பரப்புக்கு வரவில்லை. இதையடுத்து, அவர்  ஏரியில் மூழ்கி உயிரிழந்திருப்பார் என்று அதிகாரிகள் கருதினர். எனினும் அவரது உடலை தேடும் பணியில் தீவிரமாக இருந்தனர். இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பிறகு அவருடைய உடலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த மரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அத்துடன் அவர் மூழ்கி இறந்ததற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் டிரம்ப்- பிரதமர் மோடி
அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் டிரம்ப் என்று பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.
2. அமெரிக்காவில் சோகம்: கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி
அமெரிக்காவில் கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலியானார்.
3. அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
4. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.
5. அமெரிக்காவில் பரபரப்பு: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.