உலக செய்திகள்

இங்கிலாந்தில் யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி + "||" + London UKPowerNetworks dappadi K. Palaniswami,

இங்கிலாந்தில் யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இங்கிலாந்தில் யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
லண்டனில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சஃபோல்க் என்ற இடத்தில் யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டார்.
லண்டன்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து பாராளுமன்ற கூட்டரங்கில்   நகர உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

 லண்டனில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சஃபோல்க் என்ற இடத்தில் யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டார்.


மேம்படுத்தப்பட்ட மின்சார உள்கட்டமைப்பு மற்றும் மின் விநியோகம், மின்சார கேபிள்கள் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். லண்டன் மற்றும் இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மின்சார கேபிள்கள், சாதனங்களைப் பொருத்துதல், பராமரித்தல் மற்றும் தரம் உயர்த்துதல் ஆகிய பணிகளை இந்நிறுவனம் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, லண்டன் நகரில் உள்ள 200 ஆண்டு பழமையான அத்தீனியம் சங்கத்தை முதலமைச்சர் பார்வையிட்டார். அவரை வரவேற்ற தமிழ் மற்றும் இந்திய வம்சாவளியினர் தென்னிந்திய விருந்து அளித்து கவுரவித்தனர். கவுரவமிக்க அத்தீனியம் சங்கத்தைச் சேர்ந்த 52 பேர் இதுவரை பல்வேறு துறைகளில் நோபல் பரிசை வென்றுள்ளனர்.

லண்டன் ஆம்புலனஸ் சர்வீசையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு பணியில் உயிரிழப்பவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிதி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிர் இழப்பவர்களுக்கான நிதி உதவியை, ரூ.50 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2. எந்தெந்த தொழிற்சாலைகளை திறப்பது என 20-ந் தேதி அறிவிப்பு: “மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
“மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” என்றும், “எந்தெந்த தொழிற்சாலைகளை திறப்பது என 20-ந் தேதி அறிவிக்கப்படும்” என்றும் சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
3. கொரோனா தடுப்புக்கு தொழில் நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
வருமான வரிச்சலுகையை கருத்தில் கொண்டு கொரோனா நோய் தடுப்புக்கு பெருநிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க வேண்டும்: அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரம் குறைப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கால அளவு மதியம் 1 மணி என குறைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5. கொரோனாவின் வீரியத்தை சிலர் புரிந்து கொள்ளவில்லை; தேவை இல்லாமல் வெளியே சுற்றுகிறார்கள் ஊரடங்கு கடுமையாக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
கொரோனாவின் வீரியத்தை சிலர் புரிந்துகொள்ளாமல் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதாகவும், இதனால் ஊரடங்கை கடுமையாக்கும் நிலை ஏற்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.