காஷ்மீர் போராட்டக்காரர்கள் என ஆபாச நடிகையின் படத்தை ட்விட் செய்த பாகிஸ்தான் தூதர்


காஷ்மீர் போராட்டக்காரர்கள் என ஆபாச நடிகையின் படத்தை ட்விட் செய்த பாகிஸ்தான் தூதர்
x
தினத்தந்தி 3 Sep 2019 10:48 AM GMT (Updated: 3 Sep 2019 10:48 AM GMT)

காஷ்மீர் போராட்டக்காரர்கள் என ஆபாச நடிகை ஜானி ஜின்சின் புகைப்படத்தை இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் ட்விட் செய்தார்.

இஸ்லாமாபாத்

காஷ்மீரில் படுகொலை நடப்பதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை. இதனால், சர்வதேச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கை எடுப்பது கடினம் என அந்த நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் கவார் குரேஷி கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன்,  மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சர்வதேச நாடுகளின் உதவியை நாடியது. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தானை  ஆதரிக்கவில்லை. 

இதனால், விரக்தியடைந்த பாகிஸ்தான், சீனா உதவியுடன் ஐ.நா., பாதுகாப்பு சபையில் முறையிட்டது. ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என நிரந்தர உறுப்பு நாடுகள் கூறியதை ஐ.நா.,வும் ஏற்று கொண்டன. இதனால் பாகிஸ்தான் அரசாங்கமும் அமைச்சர்களும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை நிலைமை குறித்து குரல் கொடுத்து வருகிறார்கள். மேலும் போர் வெறியைத் தூண்டுவதில் மும்முரமாக உள்ளனர்.

அக்டோபரில் ஒரு "முழுமையான போர்" என்ற கணிப்பிலிருந்து "125-150 கிராம் அளவுக்கு சிறிய தந்திரோபாய அணு குண்டுகள்" இருப்பதான மிரட்டல் வரை பாகிஸ்தான்  தலைவர்கள் புதுடெல்லி மீது தங்கள் உணர்ச்சியற்ற மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவின் முன்னாள் பாகிஸ்தான் உயர் அதிகாரி அப்துல் பாசித், ஆபாச நட்சத்திரத்தின் படத்தை மறு ட்வீட் செய்துள்ளார். அவரை  காஷ்மீர் எதிர்ப்பாளர் என்று தவறாக ட்விட் செய்து உள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆபாச நடிகர் ஜானி சின்ஸ் நடித்த ஆபாச  திரைப்படத்தின் புகைப்படத்துடன்  அமைச்சர் @lblundertarar  ஒரு மோசமான இடுகையை மறு ட்வீட் செய்து உள்ளார்.

பாசித் தனது மறு ட்வீட் டை உடனடியாக நீக்கி உள்ளார். ஆனால் அதற்குள் நெட்டிசன்களால் அதிகம் பகிரபட்டு விட்டது. 

இந்தியாவின் முன்னாள் பாகிஸ்தான் தூதர் "அப்துல் பாசித்" ஆபாச  நட்சத்திரம் ஜானி சின்ஸ் படத்தை ரி டுவிட் செய்து அனந்த் நாக்  காஷ்மீரைச் சேர்ந்த யூசுப் இவருக்கு கல் வீச்சால் பார்வை போனது குரல் கொடுங்கள் என்று கூறி படத்தை ட்வீட் செய்துள்ளார்.

இருப்பினும், பின்னர் அவர் அந்த ட்வீட்டை நீக்கியதாக தெரிகிறது. பாகிஸ்தான் அதிகாரிகள் இதுபோன்ற முட்டாள்தனங்களில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல.

Next Story