உலக செய்திகள்

“காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிடுங்கள்” - இம்ரான்கானுக்கு அறிவுரை கூறிய வாலிபர் + "||" + “Get rid of Kashmir issue” - Plaintiff advised For Imrankhan

“காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிடுங்கள்” - இம்ரான்கானுக்கு அறிவுரை கூறிய வாலிபர்

“காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிடுங்கள்” - இம்ரான்கானுக்கு அறிவுரை கூறிய வாலிபர்
காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிடுங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வாலிபர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்திற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக மாற்ற பாகிஸ்தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.


இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த பாகிஸ்தான் மக்களுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்து, அதற்காக பரப்புரை செய்து வருகிறது. இதுதொடர்பாக பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்று அண்மையில் கருத்துக்கேட்பு நிகழ்ச்சி நடத்தியது.

அதில், காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் வாலிபர் ஒருவர் பேசியது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அந்த வாலிபர் பேசியதாவது:-

‘பொருளாதாரத்தில் இந்தியாவை, பாகிஸ்தான் வீழ்த்தும் போது மட்டுமே பாகிஸ்தானின் குரலை உலக நாடுகள் கேட்கும். பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படாத வரை பாகிஸ்தானின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. எனவே பாகிஸ்தான் பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு நமது நாட்டின், பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.’ இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் இம்ரான்கானுக்கு அறிவுரை வழங்கும் விதமாக அமைந்திருக்கும் வாலிபரின் இந்த பேச்சு அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் பிரச்சினை பற்றி பாகிஸ்தான் மக்கள் அக்கறை காட்டவில்லை -ஆய்வில் தகவல்
காஷ்மீர் பிரச்சினை பற்றி பாகிஸ்தான் மக்கள் அக்கறை காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.
2. காஷ்மீர் பிரச்சினை: இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. காஷ்மீர் பிரச்சினையை வேண்டுமென்றே சர்வதேசமயமாக்கி விட்டது - மத்திய அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்
ஐரோப்பிய எம்.பி.க்களை காஷ்மீரில் அனுமதித்தது, மிகப்பெரிய தவறு. காஷ்மீர் பிரச்சினையை வேண்டுமென்றே சர்வதேசமயமாக்கி விட்டது என்று மத்திய அரசை காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
4. காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பம் - டொனால்டு டிரம்ப்
காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
5. மூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: பாக். சொல்கிறது
மூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.