அதிபர் தேர்தல்: டிரம்ப்பிற்கு எதிராக வாக்களிக்க 52 சதவீத அமெரிக்கர்கள் முடிவு


அதிபர் தேர்தல்: டிரம்ப்பிற்கு எதிராக வாக்களிக்க 52 சதவீத அமெரிக்கர்கள் முடிவு
x
தினத்தந்தி 6 Sep 2019 2:12 AM GMT (Updated: 6 Sep 2019 4:18 AM GMT)

அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப்பிற்கு எதிராக வாக்களிக்க 52 சதவீத அமெரிக்கர்கள் முடிவு செய்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் மீண்டும்  குடியரசுக்கட்சி சார்பில் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட உள்ளார்.  ஜனநாயக கட்சி சார்பில் ஜோ வால்ஷ் போட்டியில் இருப்பார் என்று செய்திகள் கூறுகின்றன. 

இந்த நிலையில், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்வியோடு கருத்துக்கணிப்பு அந்நாட்டு தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை வெளியிடும் நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்டது. 

ஆன்லைன் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில், 52 சதவீதம் பேர் டிரம்ப்பிற்கு எதிராக வாக்களிக்க போவதாக தெரிவித்துள்ளனர். 42 சதவீதம் பேர் மீண்டும் டிரம்பிற்கே வாக்களிக்க இருப்பதாக கூறியுள்ளனர். 6 சதவீத வாக்காளர்கள் இன்னும் யாருக்கு வாக்கை செலுத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்யவில்லை என கூறியுள்ளனர்.


Next Story