காஷ்மீர் நிலைமை குறித்து அமெரிக்கா தொடர்ந்து கவலை


காஷ்மீர் நிலைமை குறித்து அமெரிக்கா தொடர்ந்து கவலை
x
தினத்தந்தி 6 Sep 2019 6:25 AM GMT (Updated: 6 Sep 2019 6:25 AM GMT)

காஷ்மீர் நிலைமை குறித்து அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது.

வாஷிங்டன்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்து, அம்மாநிலத்தை  2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு.

இந்தியாவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து அங்கு  வன்முறையை தூண்டிவிட திட்டமிட்டு வருகிறது. இதனால் அங்கு பல  அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு  பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததில் இருந்து காஷ்மீரின் நிலைமை குறித்து அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் கூறியதாவது:-

உள்ளூர் அரசியல் தலைவர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் உள்பட  பலர்  தடுப்புக்காவலில் வைத்து இருப்பதையும் பிராந்தியத்தில் வசிப்பவர்கள் மீதான கட்டுப்பாடுகளால் நாங்கள் தொடர்ந்து கவலைப்படுகிறோம்.

சில பகுதிகளில் இணையம் மற்றும் மொபைல் போன் தொடர்புகள் ரத்து  செய்யப்பட்டுள்ளதாக வரும் அறிக்கைகள் குறித்தும் நாங்கள்  கவலைப்படுகிறோம்.

மனித உரிமைகளை மதிக்கவும், இணையம் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் போன்ற சேவைகளுக்கான அணுகலை மீட்டெடுக்கவும் அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

உள்ளூர் தலைவர்களுடனான அரசியல் ஈடுபாட்டை இந்திய அரசு மீண்டும் தொடங்குவதற்கும், வாக்குறுதியளிக்கப்பட்ட தேர்தல்களை நடத்த  திட்டமிடுவதையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறி உள்ளார்.

Next Story