உலக செய்திகள்

ஒரு ரூபாய்க்கு துணி விற்பனை... ஐந்தே நிமிடங்களில் கடையை காலி செய்த பெண்கள் கூட்டம் + "||" + Frenzied shoppers scramble for clothes after every item drops to 1p in megastore

ஒரு ரூபாய்க்கு துணி விற்பனை... ஐந்தே நிமிடங்களில் கடையை காலி செய்த பெண்கள் கூட்டம்

ஒரு ரூபாய்க்கு துணி விற்பனை... ஐந்தே நிமிடங்களில் கடையை காலி செய்த பெண்கள் கூட்டம்
ரஷ்யாவில் ஒரு ரூபாய் என்ற மதிப்பில் துணிகளை விற்பதாக அறிவித்த ஐந்தே நிமிடங்களில் பெண்கள் கூட்டம் கடையை காலி செய்ததோடு ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு கொண்டனர்.
மாஸ்கோ,

ரஷ்யாவின் விளாடிகவ்கஸ் என்ற இடத்தில் இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் என்ற விலையில் துணிகள் விற்கப்படும் என ஸ்டோலிஸ்டா என்ற கடை நிர்வாகம் அறிவித்தது. அறிவிப்புப் பலகையைக் கண்டதும், பெண்கள் கூட்டம் கடையின் முன் வரிசை கட்டிக் குவிந்தது. கடை திறந்த மறுவினாடியே கடைக்குள் நுழைந்த பெண்கள், கடையில் வைக்கப்பட்டிருந்த துணிகளை அள்ளிக் கொண்டனர்.

ஒரே துணிக்கும், பிறர் கையில் வைத்திருக்கும் துணியைப் பறிக்கவும் நடந்த போட்டியில் ஒருவரை ஒருவர் தள்ளி தாக்கிக் கொண்டனர். கடை திறக்கப்பட்ட ஐந்தே நிமிடங்களில் கடையில் இருந்த அனைத்து துணிகளும் விற்றுத் தீர்ந்தன. மீண்டும் இதே போன்றதொரு சலுகையை விரைவில் அறிவிக்க இருப்பதாக அந்த கடை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த வீடியோவைக் கண்டவர்கள் துணிக்காக, மானத்தைக் காற்றில் பறக்க வைத்து விட்டதாகவும், இதுதான் அவர்கள் கற்றுக் கொண்ட ஒழுக்கமா? என்றும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாளுக்குநாள் பலூன் போல் ஊதிக்கொண்டே செல்லும் பெண்ணின் வயிறு வெடித்துவிடுமோ என அச்சம்
சீனாவில் பெண் ஒருவரின் வயிறு பலூன் போல் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டே செல்லும் நிலையில், அதன் காரணம் அறியாமல் மருத்துவர்களே திகைத்துப்போயுள்ளார்கள்.
2. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க விரும்பம்
உலகின் மிக அதிக ஒற்றுமைகள் மிக்க இரட்டையர்களாக அறியப்படும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் தங்களது காதலர் மூலம் கர்ப்பம் தரிக்க விரும்பியுள்ளனர்.
3. 10 முறை தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி ...11-வது முறை தாயாரே...!
ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதத்தில் 10 முறை தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் அவர் தாயார் கனத்த மனதுடன் ஒரு முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.
4. நேரடி ஒளிபரப்பின் போது செய்திவாசிப்பவரின் பல் விழுந்தது
நேரடி ஒளிபரப்பின் போது செய்திவாசிப்பவரின் பல் விழுந்தது பதற்றம் இல்லாமல் தொடர்ந்தார்.
5. நாய் முகத்துடன் உள்ள வவ்வால்
நாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.