சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்கலாம் -நாசா


சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்கலாம் -நாசா
x
தினத்தந்தி 27 Sep 2019 5:25 AM GMT (Updated: 27 Sep 2019 5:25 AM GMT)

சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்கலாம் என நாசா எடுத்த புகைப்படத்தை மையமாக கொண்டு உள்ளது.

வாஷிங்டன்

உலகின் எந்தவொரு நாட்டினாலும் இதுவரை ஆராய்ந்து அறியப்படாத நிலவின் தென் துருவப்பகுதிக்கு செல்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘இஸ்ரோ’ தீட்டி செயல்படுத்தியது.

கடந்த 7-ந் தேதி திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவப்பகுதியில் மெல்ல மெல்ல தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரை இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது பேரதிர்ச்சியாக அமைந்தது.

நாசா இன்று (செப்டம்பர்-27) சந்திரயான்-2 விக்ரம் லேண்டர்  தரையிறங்க இலக்கு நிர்ணயிக்கபட்ட  தளத்தின் படங்களை வெளியிட்டது. செப்டம்பர் 17 அன்று ஒரு  இந்த படங்களை யு.எஸ். விண்வெளி ஏஜென்சியின் சந்திர  மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் எடுத்து இருந்தது என  நாசா தனது  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மாலை வேளையில் படங்கள் எடுக்கப்பட்டதால் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. தரையிறங்கும் பகுதி படமாக்கப்பட்டபோது மாலை நேரமாக இருந்தது, இதனால் பெரிய நிழல்கள் நிலப்பரப்பின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்க வாய்ப்புள்ளது என நாசா தெரிவித்து உள்ளது.

அக்டோபரில் விக்ரம் லேண்டர் இலக்கு தளத்தை கடந்து செல்லும்போது, லேண்டரைக் கண்டுபிடித்து படம்பிடிக்க முயற்சிக்கும்போது வெளிச்சம்  சாதகமாக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

"விக்ரம் ஒரு கடினமான தரையிறக்கத்தைக் கொண்டிருந்தது, சந்திரனின் மேற்பரப்பு மலைப்பகுதிகளில் விண்கலத்தின் துல்லியமான இடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை" என்று நாசா தெரிவித்துள்ளது.

விக்ரம் லேண்டர் இலக்கு தரையிறங்கும் இடம் சந்திர தென் துருவத்திலிருந்து 600 கி.மீ தூரத்தில் ஒப்பீட்டளவில் பண்டைய நிலப்பரப்பில் அமைந்துள்ளது. (70.8 ° S அட்சரேகை, 23.5 ° E தீர்க்கரேகை)."

Next Story