உலக செய்திகள்

காஷ்மீர் மீதான இம்ரான்கான் கூற்றுக்களை உடைக்க அஜித் தோவல் சவுதி அரேபியாவுக்கு சென்றார் + "||" + Ajit Doval leaves for Saudi Arabia to counter Imrans claims on J&K

காஷ்மீர் மீதான இம்ரான்கான் கூற்றுக்களை உடைக்க அஜித் தோவல் சவுதி அரேபியாவுக்கு சென்றார்

காஷ்மீர் மீதான இம்ரான்கான் கூற்றுக்களை உடைக்க  அஜித் தோவல் சவுதி அரேபியாவுக்கு சென்றார்
காஷ்மீர் மீதான இம்ரான்கான் கூற்றுக்களை உடைக்க அஜித் தோவல் சவுதி அரேபியாவுக்கு சென்று உள்ளார்.
ரியாத்,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியா சென்றார். அங்கு பட்டத்து  இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்.  

காஷ்மீர் விவகாரத்தில் முகமது பின் சல்மானின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரியாத்தில் முகாமிட்ட  பின்னர் தோவல் அங்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.

இந்தியாவில் இருந்து தோவலின் பயணம், சவுதி தலைமையின் உறவுகள் மற்றும் உணர்வுகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தின் சமிக்ஞையாகும்.

தோவல்  பிரதமரின் மிக உயர்ந்த தூதர் என்பதால் அல்ல. காஷ்மீரில்  அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்த பின்னர் தோவல்  தனிப்பட்ட முறையில் காஷ்மீரில் அரசாங்க நடவடிக்கைகளுக்கு  தலைமை தாங்கினார். இந்த நடவடிக்கை எவ்வாறு ஒரு உள் நடவடிக்கையாக இருந்தது, அந்த மாநிலத்தில் நாட்டிற்கு பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களையும் சலுகைகளையும் அனுமதிப்பதன் மூலம் காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் ஒருங்கிணைப்பதே முழு முயற்சியாக இருந்தது என்பதை  சவுதி தலைமைக்கு தோவல் வலியுறுத்துவார்.

கடந்த சில வாரங்களில் பாகிஸ்தானின் ராஜதந்திர முயற்சிகள் சீனா, மலேசியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் ஆதரவைக் கொண்டு வந்தது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் காஷ்மீர் தொடர்பு குழுவின் அறிக்கை இருந்தபோதிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் மிகவும் நடுநிலையான பங்கை வகிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசி உரையாடல்
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாக , ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியில் உரையாடினார்.
2. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
ஐநா இந்திய தூதர் அக்பருதீன் பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
3. உள்ளூர் மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் வளர்ச்சி இருக்கும் -பிரதமர் மோடி
உள்ளூர் மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் வளர்ச்சி இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
4. காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக விஜய் சேதுபதி கருத்து
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை விஜய் சேதுபதி சாடியுள்ளார்.
5. சமூக வலைத்தளங்களில் காஷ்மீர் விவகாரம் குறித்து வைரலாகும் ‘மீம்ஸ்கள்’ நகைச்சுவையுடன், சர்ச்சையையும் கிளப்புவதால் சலசலப்பு
காஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வைரலாக பரவி வருகின்றன. இதில் பல மீம்ஸ்கள் சர்ச்சையையும் கிளப்பி இருப்பதால் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.