உலக செய்திகள்

ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை + "||" + Weather forecast warns of a powerful Hagibis storm in Japan

ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை

ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை
ஜப்பானில் இன்னும் ஓரிரு தினங்களில் ‘ஹகிபிஸ்’ எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* ஜப்பானில் இன்னும் ஓரிரு தினங்களில் ‘ஹகிபிஸ்’ எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளது. இந்த புயல் காரணமாக கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான மழையை ஜப்பான் சந்திக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த பேய் மழையால் பெரு வெள்ளம், பயங்கர நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


* வர்த்தக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கா சென்றுள்ள சீன துணை பிரதமர் லியு, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக கூறினார்.

* பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் 3 பேர் பணியின் போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதோடு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களது பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவர்களில் 2 பேருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவு
ஜப்பானின் ஹஜிஜோ-ஜீமா நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது.
2. ஜப்பானின் ஹோன்சு தீவில் அடுத்தடுத்து 2 முறை பயங்கர நிலநடுக்கம்
ஜப்பானின் ஹோன்சு தீவில் 1 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. ஜப்பானில் மியாகி பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் மியாகி பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. ஒரே இரவில் 19 பேர் கொலை... மரணதண்டனைக்கு காத்திருக்கும் இளைஞர்
ஜப்பானில் நள்ளிரவில் முதியோர் இல்லாம் ஒன்றில் புகுந்து 19 ஊனமுற்ற முதியோர்களை தூக்கத்தில் கொலை செய்த கொடூர இளைஞர் குறித்து அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
5. இன்று முடிவுக்கு வர இருந்த நிலையில் ஜப்பானில் அவசர நிலை நீட்டிப்பு - பிரதமர் ஷின்ஜோ அபே உத்தரவு
ஜப்பானில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் அங்கு இன்று முடிவுக்கு வர இருந்த அவசர நிலையை மேலும் நீட்டித்து பிரதமர் ஷின்ஜோ அபே உத்தரவிட்டுள்ளார்.