உலக செய்திகள்

வருகிற 31-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற முன்னுரிமை; இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராணி உரை + "||" + Prioritizing implementation of Brexit by 31st; Queen's speech in the Parliament of England

வருகிற 31-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற முன்னுரிமை; இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராணி உரை

வருகிற 31-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற முன்னுரிமை; இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராணி உரை
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.
லண்டன், 

‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை இங்கிலாந்து எம்.பி.க்கள் தொடர்ந்து நிராகரித்து வருவதால் ஒப்பந்தமில்லா ‘பிரெக்ஸிட்’டுக்கு வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்தநிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் 31-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், “திட்டமிட்டபடி 31-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’டை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அரசு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும்” என கூறினார்.