அறிவியலின் படி உலகின் மிகச் சிறந்த அழகியாக பெல்லா ஹடிட் தேர்வு


அறிவியலின் படி உலகின் மிகச் சிறந்த அழகியாக பெல்லா ஹடிட் தேர்வு
x
தினத்தந்தி 16 Oct 2019 12:08 PM GMT (Updated: 16 Oct 2019 12:08 PM GMT)

அறிவியல் மற்றும் கிரேக்க கணித அடிப்படையில் சூப்பர் மாடல் பெல்லா ஹடிட் தான் உலகின் மிக அழகான பெண்ணாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

லண்டன்

கிரேக்க கணிதத்தின் அடிப்படையிலும், அறிவியல் ரீதியாகவும் விஞ்ஞானிகள்  உலகின் மிக அழகான பெண்ணை தேர்ந்து எடுத்து உள்ளார்கள். விஞ்ஞான முறையில் அழகை வரையறுக்க முயற்சிக்கும்போது கிரேக்க அறிஞர்கள் பயன்படுத்திய தரங்களின்படி முக விகிதங்களின் அளவீடுகள்  கணக்கிடப்படுகின்றன. கிளாசிக் கிரேக்க கணக்கீடுகளுக்கு ஏற்ப 'பியூட்டி ஃபை கோல்டன் விகிதம் ' அழகை வரையறுத்து உள்ளது. 

பியூட்டி ஃபை கோல்டன் விகிதம் என்பது ஐரோப்பிய மறுமலர்ச்சியின் போது  உருவாகியது. கலைஞர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் தங்கள் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் போது தங்களுக்கு உதவியாக கோல்டன்  ரேஷியோ என அழைக்கப்படும் இந்த சமன்பாட்டைப் பயன்படுத்தினர்.

விஞ்ஞானிகள் ஒரு நபரை அழகாக மாற்றுவதை விளக்க இந்த கணித  சூத்திரத்தைத் பயன்படுத்தினர். ஒருவரின் முகத்தின் நீளம் மற்றும் அகலம் அளவிடப்படுகிறது. பின்னர் முடிவுகள் பிரிக்கப்படுகின்றன. கோல்டன் விகிதத்தின்படி, சிறந்த அழகான் முகம் என்பது சுமார் 1.6 அளவு குறியீடு ஆகும்.

இந்த அளவீடுகள் நெற்றி கண்களுக்கு இடையில், கண்களுக்கு இடையில் இருந்து மூக்கின் அடிப்பகுதியிலும், மூக்கின் அடிப்பகுதியிலிருந்து கன்னத்தின் அடிப்பகுதியிலும் எடுக்கப்படுகின்றன. காதுகளின் நீளம் மூக்கின் நீளத்திற்கு சமமாகவும், கண்ணின் அகலம் கண்களுக்கு இடையிலான தூரத்திற்கு  சமமாகவும் இருக்க வேண்டும்.

இந்த அளவீடுகளின் படி லண்டனின் புகழ்பெற்ற சிறந்த முக அழகு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜூலியன் டி சில்வா அழகிகளை தேர்ந்து எடுத்து உள்ளார்.

'கோல்டன் ரேஷியோ' அளவீடுகளின்படி, 23 வயதான மாடல் அழகி  பெல்லாவின் ஹடிட்டின் முகம் 94.35 சதவீதம் சரியானதாக வந்து உள்ளது. அடுத்து பாப் திவா பியோன்சே இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது முகம் 92.44 சதவீதம் சரியானதாக உள்ளது.

நடிகை அம்பர் ஹியர்ட் 91.85 சதவீத விகிதத்துடன் மூன்றாவது இடத்தில்  உள்ளார். பாப் பாடகி அரியனா கிராண்டே 91.81 சதவீதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

இது குறித்து டாக்டர் ஜூலியன் டி சில்வா கூறியதாவது;-

முகத்தின் அனைத்து கூறுகளும் உடல் முழுமைக்காக அளவிடப்படும் போது பெல்லா ஹடிட் தெளிவான வெற்றியாளராக இருந்தார். அவர் தனது தாடை 99.7 சதவிகித மதிப்பெண்ணுடன் சரியான வடிவத்திலிருந்தது என கூறினார்.

Next Story