உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்: குடும்பத்தினர் 4 பேரை கொலை செய்த இந்தியர் + "||" + America: A Man is killed her own family 4 members

அமெரிக்காவில் பயங்கரம்: குடும்பத்தினர் 4 பேரை கொலை செய்த இந்தியர்

அமெரிக்காவில் பயங்கரம்: குடும்பத்தினர் 4 பேரை கொலை செய்த இந்தியர்
அமெரிக்காவில் உள்ள ரோஸ்வில்லி, பிளேசர் கவுண்டி நகரில் ஒரு குடியிருப்பில் வசித்துவந்தவர் சங்கர் நாகப்பா ஹாங்குட் (வயது 53). இந்தியாவை சேர்ந்த இவர் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலைபார்த்து வந்தார்.
சான்பிரான்சிஸ்கோ, 

சங்கர் நாகப்பா ஹாங்குட் நேற்று ஒரு காரில் பல இடங்களில் சுற்றிவிட்டு இறுதியாக மவுண்ட் சாஷ்டா போலீஸ் நிலையம் சென்று, தனது வீட்டில் 4 பேரை கொலை செய்துவிட்டேன் என்று கூறி சரண் அடைந்தார். அவர் தனது காரிலேயே ஒரு உடலையும் எடுத்துவந்தார்.

போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இறந்தவர்கள் யார்? எதற்காக அவர்களை கொலை செய்தார்? என்ற தகவல்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்கள் அவரது குடும்பத்தினர், 2 பேர் பெரியவர்கள், 2 பேர் சிறுவர்கள் என்றும் கூறினர். இதுபோன்ற கொலையை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். போலீசார் சங்கர் நாகப்பா ஹாங்குட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.