உலக செய்திகள்

பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + Philippines earthquake: Child killed and dozens injured as major 6.4-magnitude quake hits Mindanao island

பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மணிலா

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்  ஒரு குழந்தை பலியானது 25 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் அது 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின, பல கட்டங்கள் இடிந்து விழுந்துள்ளன.

நாட்டின் இரண்டாவது பெரிய தீவான மத்திய மிண்டானாவோவில் நிலநடுக்க  அதிர்ச்சியின் போது ஒரு ஷாப்பிங் சென்டர் தீப்பிடித்து எரிந்தது.

வலுவான மற்றும் மேலோட்டமானதாக ஏற்ப்பட  இந்த நிலநடுக்கம் எட்டு மைல் ஆழம் மட்டுமே கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமானதை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும். கொலம்பியோவிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள கோட்டாபடோவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நகரம்  33,258 மக்கள் தொகையை கொண்டது.

சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. மிசோரமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
மிசோரமில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
2. அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 2.7 ஆக பதிவு
அசாமில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
3. இந்தோனேசியா, சிங்கப்பூரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியா, சிங்கப்பூரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
4. மிசோரமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.6 ஆக பதிவு
மிசோரமில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது.
5. அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.