உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை + "||" + Controversy over billboards trampling female model on US President Trump's face

அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை

அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை
அமெரிக்காவில் துணி நிறுவன விளம்பர பலகையில் அதிபர் டிரம்பை பெண் ஒருவர் மிதிப்பது போன்ற புகைப்படம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
நியூயார்க்,

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் துணி நிறுவனம் ஒன்று தனது கடை முன்பு விளம்பர பலகை வைத்துள்ளது.  அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உருவத்தினையொத்த ஒருவரை தரையில் கிடத்தி, தடகள போட்டிக்கான உடை அணிந்த பெண் ஒருவர் அவரது முகத்தின் மீது காலால் மிதித்தபடி உள்ளார்.

பின்பு மற்றொரு கையில் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற கயிறுகளால் அவரை கட்டி போட்டபடியும் உள்ளார்.

இந்த விளம்பர பலகை வைக்கப்பட்டு இருப்பது பற்றி அந்நாட்டின் ஊடகம் மீது டிரம்பின் மகனான ஜூனியர் டிரம்ப் சாடியுள்ளார்.  இதுபற்றிய அவருடைய டுவிட்டர் பதிவில், நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிரபல ஊடகங்களே.  உங்களுக்கு முட்டாள்தன மற்றும் சுவாரசியமில்லாத மீம்களை வெளியிடுவதற்கு நேரமுள்ளது.

டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டு உள்ள இந்த விளம்பர பலகை பற்றிய செய்தியை ஊடகங்களில் வெளியிடுவதற்கும் நேரம் ஒதுக்கும்படி உங்களிடம் கூறி கொள்கிறேன்.  அப்படி இல்லையெனில் நீங்கள் அனைவரும் வீணர்களே என ஆவேசமுடன் தெரிவித்து உள்ளார்.

இந்த பலகையில் இடம் பெற்று உள்ள பெண் மாடல் மிச்சல் மெசா என்றும் அவர் பள்ளிக்கூடமொன்றின் ஆசிரியர் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சிறப்பு ரெயிலில் சென்றபோது பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது: 2 குழந்தைகளும் சில மணி நேரத்திலேயே உயிரிழந்ததால் சோகம்
சிறப்பு ரெயிலில் சென்றபோது ரெயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்த 2 குழந்தைகளும் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
2. திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்
திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
3. உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவருடன் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு
கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவருடன் போராட் டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
4. மனைவி, குழந்தையை தவிக்கவிட்டு ‘டிக்-டாக்’ மூலம் பழக்கமான புதுக்கோட்டை பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர்
பட்டதாரி மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு ‘டிக்-டாக்’ மூலம் பழக்கமான புதுக்கோட்டையை சேர்ந்த இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்ட வாலிபரை மீட்டு தரக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.