திருமணமான மூன்றே மாதத்தில் ஆசை மனைவிக்கு அளித்த பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர்


திருமணமான மூன்றே மாதத்தில் ஆசை மனைவிக்கு  அளித்த  பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர்
x
தினத்தந்தி 22 Oct 2019 9:40 AM GMT (Updated: 22 Oct 2019 10:13 AM GMT)

திருமணமான மூன்றே மாதத்தில் தனது ஆசை மனைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை தாய்லாந்து மன்னர் பறித்து உள்ளார்.

பாங்காக்,

தாய்லாந்து நாட்டின் 10-வது ராமா என்று அழைக்கப்படும் 67 வயதான வஜிரா லோங்கார்ன் கடந்த 2016 ஆம் ஆண்டில் தனது தந்தையின் மறைவுக்கு பின் புதிய மன்னராக பொறுப்பேற்று கொண்டார்.

3 மாதங்களுக்கு முன் மன்னர் தனது பெண் பாதுகாப்பு அதிகாரியை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் அந்த பெண் உடனடியாக தாய்லாந்து நாட்டின் அரசியாகவும்  அறிவிக்கப்பட்டார். முன்னாள்,  தாய் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிய சுஜிதா திட்ஜாய் பின்னர் மன்னரின் பாதுகாப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றினார்.

அப்போது மன்னருக்கும் சுஜிதா திட்ஜாய்க்கும் காதல் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மன்னர் வஜிரா லோங்கார்ன் 3 முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர் என்பதும் அவருக்கு 7 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாய்லாந்தின் ராஜா விசுவாசமற்ற தன்மைக்காக பட்டங்களையும் இராணுவ பதவிகளையும்  தனது மனைவியிடம் இருந்து பறித்தார். தனது சொந்த நலனுக்காக தனது அதிகாரப்பூர்வ மனைவி, நாட்டின் மகாராணியின் மதிப்பை குறைக்க  முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். மன்னருக்கு உண்மையாக இல்லாதது மற்றும் மகாராணிக்கு சமமாக நடந்து கொள்ள முயன்றது ஆகிய காரணங்களுக்காக அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மன்னர் வஜிரா லோங்கார்னின் அரச கட்டளை நேற்று  வெளியிடப்பட்டது.  34 வயதான சுஜிதா திட்ஜாய்  ராணி பட்டத்தை வழங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரிடம் இருந்து பட்டம் பறிக்கப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்து இராணுவ பதவியும் திரும்ப பெறப்பட்டது.

ராணியின் நடவடிக்கைகள் "அவமரியாதைக்குரியவை, நன்றியுணர்வு இல்லாதது,  மற்றும் அரச ஊழியர்களிடையே பிளவுகளை ஏற்படுத்துதல், மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துதல் மற்றும் தேசத்தையும் முடியாட்சியையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துதல்" காரணமாக அவரிடம் இருந்து பட்டம் பறிக்கப்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story