உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்தியர்களின் வீட்டை குறிவைத்து திருடிய பெண் + "||" + A woman who stole Indians home in the US

அமெரிக்காவில் இந்தியர்களின் வீட்டை குறிவைத்து திருடிய பெண்

அமெரிக்காவில் இந்தியர்களின் வீட்டை குறிவைத்து திருடிய பெண்
அமெரிக்காவில் இந்தியர்களின் வீட்டை குறிவைத்து பெண் ஒருவர் திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நியூயார்க்,

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் சாகா காஸ்ட்ரோ (வயது 44). கொள்ளைக் கூட்டத்தின் தலைவி. கடந்த 2011 ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மிச்சிகன், நியூயார்க், ஜார்ஜியா, ஓகியோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பல வீடுகளில் தனது கொள்ளை கும்பலின் உதவியுடன் திருடி வந்தார்.


இந்தநிலையில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது மிச்சிகன் கோர்ட்டு, சாகா காஸ்ட்ரோவுக்கு 37 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

காஸ்ட்ரோவை தலைவியாக கொண்ட அந்த கும்பல், அமெரிக்க வாழ் இந்தியர்களின் வீடுகளை குறிவைத்து திருடுவதையே வழக்கமாக கொண்டிருந்தனர். வீட்டின் உரிமையாளர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி உடை அணிந்து சென்று திருடுவது அந்த கும்பலின் வாடிக்கையாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் பயங்கரம்: கடற்படை பயிற்சி நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி
அமெரிக்காவில் கடற்படை பயிற்சி நிலையத்தில் சவுதி அரேபிய பயிற்சி மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். அவர் போலீஸ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2. அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 3 வீரர்கள் பலி
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் அதில் இருந்த 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
3. அமெரிக்காவில் திருடர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
அமெரிக்காவில் திருடர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு திருடர்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.
4. அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்
அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் சாவு - மலை உச்சியில் இருந்து தவறி விழுந்தார்
அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் ஒருவர், மலை உச்சியில் இருந்து தவறி விழுந்ததால் உயிரிழந்தார்.