உலக செய்திகள்

கொல்லப்பட்ட ஐ.எஸ். தலைவர் பாக்தாதியின் மனைவி சிரியாவில் கைது + "||" + Killed ISIS Baghdadi's wife arrested in Syria

கொல்லப்பட்ட ஐ.எஸ். தலைவர் பாக்தாதியின் மனைவி சிரியாவில் கைது

கொல்லப்பட்ட ஐ.எஸ். தலைவர் பாக்தாதியின் மனைவி சிரியாவில் கைது
உலகின் பல்வேறு நாடுகளில் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். அமைப்பின் தலைவராக இருந்த அபுபக்கர் பாக்தாதி, சிரியாவின் இட்லிப் நகரில் கடந்த 26-ந்தேதி அமெரிக்க படைகள் சுற்றி வளைத்தபோது குண்டுகளை வெடிக்கச் செய்து இறந்தார்.
அங்காரா,

பாக்தாதியின்  மரணத்தை ஐ.எஸ். இயக்கமும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து பாக்தாதியின் குடும்ப உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பாக்தாதியின் சகோதரி ரசியா அவாத்தை, கணவர் மற்றும் குழந்தைகளுடன் துருக்கி படையினர் கைது செய்தனர்.

இதைப்போல பாக்தாதியின் மனைவியையும் துருக்கி ராணுவம் கைது செய்துள்ளது. இந்த தகவலை அதிபர் எர்டோகன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சுரங்கம் ஒன்றில் பாக்தாதி தற்கொலை செய்து கொண்டார். நாங்கள் அவரது மனைவியை சிரியாவில் கைது செய்துள்ளோம். ஆனால் இது தொடர்பாக நாங்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதை தற்போது நான் முதல் முறையாக வெளியிடுகிறேன். பாக்தாதியின் சகோதரி மற்றும் அவரது கணவரையும் நாங்கள் கைது செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.