உலக செய்திகள்

தாய்லாந்தில் புறப்பட தயாரானபோது விமானத்தின் அவசரகால கதவை திறந்த போதை வாலிபர் + "||" + A drug lord opened the plane's emergency door as he prepared to take off in Thailand

தாய்லாந்தில் புறப்பட தயாரானபோது விமானத்தின் அவசரகால கதவை திறந்த போதை வாலிபர்

தாய்லாந்தில் புறப்பட தயாரானபோது விமானத்தின் அவசரகால கதவை திறந்த போதை வாலிபர்
தாய்லாந்தில் புறப்பட தயாரானபோது விமானத்தின் அவசரகால கதவை போதை வாலிபர் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாங்காக்,

தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள சியாங்மாய் நகரத்தில் இருந்து தலைநகர் பாங்காக்குக்கு ‘தாய் ஸ்மைல்’ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 80 பயணிகள் இருந்தனர்.


அப்போது வாலிபர் ஒருவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து சென்று, விமானத்தின் அவசரகால வழியை திறந்தார். இதில் கதவு முழுவதுமாக திறந்துவிட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர்.

இது குறித்து விமான ஊழியர்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, புறப்பட தயாராக இருந்த விமானம் நிறுத்தப்பட்டு விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது 12 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது
சென்னை-யாழ்ப்பாணம் இடையே விமான சேவை நேற்று தொடங்கியது. சென்னையில் இருந்து 12 பயணிகளுடன் முதல் விமானம் யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றது. வாரத்தில் 3 நாட்கள் இந்த விமான சேவை நடைபெறும்.
2. தாய்லாந்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 15 பேர் பலி
தாய்லாந்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
3. தாய்லாந்தில் ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு
தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை மோடி நேற்று சந்தித்தார்.
4. தாய்லாந்தில் பிரதமர் மோடி : இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
தாய்லாந்தில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
5. பாலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் திணறும் விமானம்..!
பயணிகள் விமானம் ஒன்று நடுரோட்டில் மேம்பாலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் திணறும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.