உலக செய்திகள்

அமெரிக்காவில் தலையில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி + "||" + Dog born with tail growing out of its head

அமெரிக்காவில் தலையில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி

அமெரிக்காவில் தலையில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி
அமெரிக்காவில் நாய்க்குட்டி ஒன்று தலையில் வாலுடன் பிறந்துள்ளது.
நியூயார்க்,

அமெரிக்காவின் மிசூரி மாகாணம் ஜாக்சன் நகரில் உள்ள விலங்குகளை மீட்டு பராமரிக்கும் ‘மேக்ஸ் மிஷன்’ என்ற தொண்டு நிறுவனம் நாய்க்குட்டி ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறது. அந்த நாய்க்குட்டிக்கு நர்வால் என்று பெயரிடப்பட்டு உள்ளது.


பிறந்து 10 வாரங்கள் ஆன நர்வால் மற்ற நாய்க்குட்டிகளை போல் இல்லாமல் சற்றே வித்தியாசமாக இருப்பதால் அந்த நாய்க்குட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன வித்தியாசம் என கேட்கிறீர்களா? அந்த நாய்க்குட்டியின் தலையில் நெற்றிக்கு முன்பக்கத்தில் வால் முளைத்திருக்கிறது. இது பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக காணப்பட்டாலும், அதன் சேட்டைக்கு மட்டும் குறைவு இல்லை.

நர்வால் செய்யும் சேட்டைகளை ‘மேக்ஸ் மிஷன்’ தொண்டு நிறுவனம் தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் நர்வாலுக்கு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. நெற்றியில் வாலுடன் நர்வால் சுட்டித்தனம் செய்யும் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

நெற்றியில் வால் இருப்பதால், நாய்க்குட்டிக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 3 வீரர்கள் பலி
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் அதில் இருந்த 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
2. அமெரிக்காவில் திருடர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
அமெரிக்காவில் திருடர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு திருடர்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.
3. அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்
அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் சாவு - மலை உச்சியில் இருந்து தவறி விழுந்தார்
அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் ஒருவர், மலை உச்சியில் இருந்து தவறி விழுந்ததால் உயிரிழந்தார்.
5. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவானது.