

வாஷிங்டன்,
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ், இச்சம்பவத்தின் 11-வது நினைவு தினத்தையொட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
11 ஆண்டுகளுக்கு முன்பு, பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலால் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேரின் உயிர் பறிபோனது. அவர்களை நினைவுகூர்கிறோம். இந்த தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்கள், நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரின் கோரிக்கையை ஆதரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.