உலக செய்திகள்

கனடாவில்விமானம் விழுந்து நொறுங்கி 3 பேர் சாவு + "||" + In Canada The plane crashes and 3 people die

கனடாவில்விமானம் விழுந்து நொறுங்கி 3 பேர் சாவு

கனடாவில்விமானம் விழுந்து நொறுங்கி 3 பேர் சாவு
கனடாவில் விமானம் விழுந்து நொறுங்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஒட்டாவா, 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெர்ஸ்னோ நகரில் இருந்து கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்துக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 3 பேர் இருந்தனர்.

இந்த விமானம் கனடாவில் உள்ள கேப்ரியோலா தீவுக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...