வடமேற்கு சிரியாவில் வன்முறையால் 235,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்


வடமேற்கு சிரியாவில் வன்முறையால் 235,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 28 Dec 2019 6:10 AM GMT (Updated: 28 Dec 2019 6:10 AM GMT)

வடமேற்கு சிரியாவின் மீது ராணுவத்தின் கடும் தாக்குதலால் 2.35 லட்சம் பொதுமக்கள் வெளியேறி உள்ளனர்.

இட்லிப்,

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் நடந்து வரும் சண்டை காரணமாக கடந்த 2 வாரங்களில் மட்டும் இரண்டு லட்சத்து 35 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டுப்போர் மற்றும் தீவிரவாத தாக்குதல் காரணமாக அந்த நாடு பெரும் சீரழிவைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் 2வது பெரிய நகரமான இட்லிப் நகரில் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்துள்ளது. இதனால் கடந்த டிசம்பர் 12 முதல் 25 வரை தெற்கு இட்லிப்பில் உள்ள மராட் அல்-நுமன் பகுதியில் மக்கள் வெளியேறி உள்ளனர். கிட்டத்தட்ட அந்த பகுதியே காலியாகி உள்ளது. 

அந்த பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக ஐநா சபையின் மனித உரிமைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய விமானப்படையின் உதவியுடன் சிரிய ராணுவம் இட்லிப் பகுதியில் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

Next Story