உலக செய்திகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பளார் அறை விட்ட பாகிஸ்தான் அமைச்சர் + "||" + Pakistan Minister Fawad Hussain Slaps Journalist After He Links Him To TikTok Star

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பளார் அறை விட்ட பாகிஸ்தான் அமைச்சர்

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பளார் அறை விட்ட பாகிஸ்தான் அமைச்சர்
டிக் டாக் பெண் பிரபலத்துடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரை பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி கன்னத்தில் அறைந்துள்ளார்.
இஸ்லாமாபாத்

பாகிஸ்தானை சேர்ந்த ஹரீம் ஷா என்ற இளம்பெண், டிக் டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு அந்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமாக திகழ்கிறார். அவருடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சவுத்ரியை தொடர்புபடுத்தி நிகழ்ச்சி தொகுப்பாளர் முபாசிர் லூக்மேன் என்பவர் பேசியிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் சவுத்ரி, பஞ்சாப் மாகாண அமைச்சர் ஒருவரின் மகனுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த முபாசிரை கன்னத்தில் அறைந்தார். தனிப்பட்ட முறையில் விமர்சித்ததற்காக அவரை அறைந்ததாக சவுத்ரி ஒப்புக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாளுக்குநாள் பலூன் போல் ஊதிக்கொண்டே செல்லும் பெண்ணின் வயிறு வெடித்துவிடுமோ என அச்சம்
சீனாவில் பெண் ஒருவரின் வயிறு பலூன் போல் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டே செல்லும் நிலையில், அதன் காரணம் அறியாமல் மருத்துவர்களே திகைத்துப்போயுள்ளார்கள்.
2. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க விரும்பம்
உலகின் மிக அதிக ஒற்றுமைகள் மிக்க இரட்டையர்களாக அறியப்படும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் தங்களது காதலர் மூலம் கர்ப்பம் தரிக்க விரும்பியுள்ளனர்.
3. 10 முறை தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி ...11-வது முறை தாயாரே...!
ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதத்தில் 10 முறை தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் அவர் தாயார் கனத்த மனதுடன் ஒரு முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.
4. நேரடி ஒளிபரப்பின் போது செய்திவாசிப்பவரின் பல் விழுந்தது
நேரடி ஒளிபரப்பின் போது செய்திவாசிப்பவரின் பல் விழுந்தது பதற்றம் இல்லாமல் தொடர்ந்தார்.
5. நாய் முகத்துடன் உள்ள வவ்வால்
நாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.