கொரோனா வைரஸ் நோய்: உலகம் முழுவதும் 1354 பேர் பாதிப்பு


கொரோனா வைரஸ்  நோய்:  உலகம் முழுவதும்  1354 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2020 6:26 AM GMT (Updated: 25 Jan 2020 6:26 AM GMT)

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோயினால் 1354 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

லண்டன்

கடந்த சில தினங்களாகவே உலக மக்களை மிரட்டி வரும் செய்தி என்றால், அது கொரோனா வைரஸ் தான், ஏனெனில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து, மற்றவர்களுக்கு எளிதில் பரவுவதால் பீதியில் உள்ளனர். இந்த வைரஸின் தாக்க ஆரம்பிக்கப்பட்ட இடம் சீனாவின் வுகான் பகுதி, இந்த நகரத்தில் இருக்கும் மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னர் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற சிலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால், இது மெல்ல, மெல்ல அமெரிக்கா, கொரியா போன்ற நாடுகளுக்கு பரவியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இல்லை என்று நிம்மதி பெரு மூச்சு விட்ட நிலையில், பிரான்சில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதன்முதலில் இந்த பாதிப்பு குறித்து தகவல்  வெளிவந்ததிலிருந்து வுகானில் இருந்து 2,000 பேர் பிரிட்டனுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நேபாளம், வியட்நாம், ஹாங்காங், மாகூகு, மலேசியா போன்ற நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  நோயினால் 1354 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

Next Story