உலக செய்திகள்

நிரவ் மோடியின் காவல் பிப்.27 ஆம் தேதி வரை நீட்டிப்பு + "||" + PNB fraud case: Nirav Modi remanded until February 27

நிரவ் மோடியின் காவல் பிப்.27 ஆம் தேதி வரை நீட்டிப்பு

நிரவ் மோடியின் காவல் பிப்.27 ஆம் தேதி வரை நீட்டிப்பு
ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிரவ் மோடியின் காவல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
லண்டன்,

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த ஆண்டு மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.  அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு மறுத்து விட்டது. நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரவ் மோடியின் காவல் இன்றுடன் முடிந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று வெஸ்ட்மின்ஸ்ட்டர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீரவ் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, நீரவ் மோடியின் சிறைக்காவலை மேலும் 28 நாட்கள் (பிப்ரவரி 27-ம் தேதி வரை) நீட்டித்து உத்தரவிட்டது.  நீரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை மே மாதம் 11ம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.