கொரோனா வைரஸ் பாதிப்பு; ஈரான் நாட்டில் ஒரே நாளில் 127 பேர் பலி


கொரோனா வைரஸ் பாதிப்பு; ஈரான் நாட்டில் ஒரே நாளில் 127 பேர் பலி
x
தினத்தந்தி 23 March 2020 12:03 PM GMT (Updated: 23 March 2020 12:03 PM GMT)

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 127 பேர் பலியாகி உள்ளனர்.

தெஹ்ரான்,

சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது.  தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  இதுவரை உலக அளவில் 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.  3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனா தவிர்த்து, இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது.  ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்று 127 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 1,812 ஆக உயர்ந்துள்ளது.

இதுபற்றி ஈரான் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜகான்பூர் கூறும்பொழுது, கடந்த 24 மணிநேரத்தில் 1,411 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 49 ஆக உயர்ந்து உள்ளது என கூறியுள்ளார்.

Next Story