உலக செய்திகள்

ஆப்பிரிக்க நாட்டில் கன்டெய்னர் லாரியில் இருந்து 64 உடல்கள் மீட்பு + "||" + 64 bodies recovered from container lorry in African country

ஆப்பிரிக்க நாட்டில் கன்டெய்னர் லாரியில் இருந்து 64 உடல்கள் மீட்பு

ஆப்பிரிக்க நாட்டில் கன்டெய்னர் லாரியில் இருந்து 64 உடல்கள் மீட்பு
ஆப்பிரிக்க நாட்டில் கன்டெய்னர் லாரியில் இருந்து 64 உடல்கள் மீட்கப்பட்டன.
மாபுடோ,

உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் நாடுகளின் எல்லைகளை கடக்க சட்டவிரோதமான மற்றும் அபாயகரமான பயணங்களை மேற்கொள்கின்றனர்.


அந்த வகையில் பணத்துக்காக ஆட்களை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டு கடத்தி செல்லும் கும்பல்கள் அகதிகளை கன்டெய்னர்களில் அடைத்து வைத்து லாரிகளில் கொண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் டேடே மாகாணத்தில் உள்ள ஒரு சாலையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் இருந்த கன்டெய்னருக்குள் 64 பேர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் 14 பேர் சுயநினைவை இழந்த நிலையில் இருந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாரணையில் கன்டெய்னரில் இருந்த அனைவரும் எத்தியோப்பியாவை சேர்ந்த அகதிகள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 42 பேர் பலி: 80 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 42 பேர் பலியாகினர். மேலும் இந்த சம்பவத்தில் 80 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
2. ஆப்பிரிக்க நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 30 பேர் பலி
ஆப்பிரிக்க நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 30 பேர் பலியாயினர்.
3. ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பஸ் கவிழ்ந்த கோர விபத்து சிக்கி 26 பேர் பலியாகினர்.