உலக செய்திகள்

ஸ்பெயினில் ருசிகரம்: கொரோனா பீதியில் இருக்கும் மக்களை பாட்டு பாடி உற்சாகப்படுத்திய போலீசார் + "||" + Taste of Spain: The police in the Corona panic encouraged people to sing

ஸ்பெயினில் ருசிகரம்: கொரோனா பீதியில் இருக்கும் மக்களை பாட்டு பாடி உற்சாகப்படுத்திய போலீசார்

ஸ்பெயினில் ருசிகரம்: கொரோனா பீதியில் இருக்கும் மக்களை பாட்டு பாடி உற்சாகப்படுத்திய போலீசார்
ஸ்பெயினில் கொரோனா பீதியில் இருக்கும் மக்களை, போலீசார் பாட்டு பாடி உற்சாகப்படுத்திய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாட்ரிட்,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் ஐரோப்பிய நாடானா ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தனது கோரப்பிடியை இறுக்கி வருகிறது. அங்கு கொரோனா வைரசால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 33 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் அங்குள்ள மல்லோரியா தீவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக பாடல்கள் பாடி, இசைக்கருவிகளை இசைத்து மகிழ்வித்தனர்.

போலீசார் பாட்டு பாடுவதை கேட்டு வீடுகளில் இருந்த மக்கள் வாசலுக்கு வந்தும் வீட்டின் மாடிகளில் நின்றும் கைத்தட்டி போலீசாருடன் இணைந்து பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் கொரோனா பீதியிலும் முகக்கவசம் அணிந்து திருமணம்; மணமக்களின் பெற்றோர்-உறவினர் மட்டுமே பங்கேற்பு
ஈரோட்டில் கொரோனா பீதியிலும் மணமக்களின் பெற்றோர்-உறவினர் மட்டுமே பங்கேற்ற திருமணம் நடைபெற்றது.
2. ஸ்பெயினில் கைவிடப்பட்ட முதியோர் இல்லங்கள்: 12 முதியவர்கள் படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்த பரிதாபம்
கொரோனா வேகமாக பரவி வரும் ஸ்பெயின் நாட்டில் கைவிடப்பட்ட முதியோர் 12 பேர் படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
3. கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் உயிரிழப்பு அவசரநிலை நீட்டிப்பு
கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் உயிரிழந்து உள்ளனர்.இதை தொடர்ந்து அங்கு அவசர நிலை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
4. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலியானவர்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்வு
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளது.
5. கொரோனா பீதியால் மாட்டு பாலின் வருமானத்தை விட கோமியம் - சாணத்தில் வருமானம் அதிகம்;லிட்டர் ரூ.500
கொரோனா பீதியால் மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட கோமியம் மற்றும் சாணத்தில் வருமானம் அதிகம் என கூறப்படுகிறது.