அரசு அறிவிப்பை மீறினால் கைது; தாய்லாந்து பிரதமர் எச்சரிக்கை


அரசு அறிவிப்பை மீறினால் கைது; தாய்லாந்து பிரதமர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 March 2020 11:34 PM GMT (Updated: 24 March 2020 11:34 PM GMT)

அரசு அறிவிப்பை மீறினால் கைது செய்யப்படுவார்கள் என்று தாய்லாந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாங்காக்,

தாய்லாந்தில் கொரோனா பாதிப்பால் அந்நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பெருகிவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் தாய்லாந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த நாட்டின் பிரதமர் பிரயூத் சான்-ஓ-சா, நேற்று தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் பேசுகையில், “கொரோனா தொற்று இருக்கும் என்று சந்தேகப்படுபவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பக்கூடாது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சோதனை மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. நிலைமை மோசமானால், வீட்டைவிட்டு வெளியேற தடைச் சட்டம் அறிவிக்கப்படும். அரசின் அறிவிப்புகளை ஏற்று மக்கள் நடந்து கொள்ளவேண்டும். மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். விலையை உயர்த்தும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.


Next Story