டிரம்ப் மனைவிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை: முடிவு என்ன?


டிரம்ப் மனைவிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை: முடிவு என்ன?
x
தினத்தந்தி 24 March 2020 11:40 PM GMT (Updated: 24 March 2020 11:40 PM GMT)

டிரம்ப் மனைவிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையின் முடிவு என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டு நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அங்கு நேற்று முன்தினம் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 43,700 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு பலி எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஜனாதிபதி டிரம்ப்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட அதே நாளில் மெலானியா டிரம்ப்புக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவி காரென் பென்ஸ் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதும், அதில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியானதும் குறிப்பிடத்தக்கது.


Next Story