ஸ்பெயினில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 3,434 ஆக உயர்வு


ஸ்பெயினில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 3,434 ஆக உயர்வு
x
தினத்தந்தி 25 March 2020 12:19 PM GMT (Updated: 25 March 2020 12:19 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பு உயிர்ப்பலியில் உலக அளவில் இத்தாலிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஸ்பெயின் உள்ளது.

மாட்ரீட்

கொரோனா பலி எண்ணிக்கையில்  இத்தாலிக்கு அடுத்து  ஸ்பெயின் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயினில் இதுவரை 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இதுவரை 3,281 பேர் உயிரிழந்துள்ளனர். 

இத்தாலி 6,820 என்ற பலி எண்ணிக்கையுடன் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. கொரோனா பரவ தொடங்கிய சீனாவில் உயிரிழப்பு குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் கொரோனாவால் 47,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் இரண்டாவது மிக மோசமாக பாதிக்கபட்டு உள்ள நாடாகும். 4.6 கோடி மக்கள் தொகை கொண்ட இத்தாலி  ஐரோப்பிய ஒன்றியத்தின் நான்காவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகும்.

ஐரோப்பிய ஒன்றிய  தலைவர்கள் ஸ்பெயினுக்கு உறுதுணையாக இருப்போம் என கூறி உள்ளனர். 

"நாங்கள் உங்களுக்கு உதவ  அயராது உழைக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தனியாக இல்லை" என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.

Next Story