உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை + "||" + Trump again tests negative for coronavirus

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாஷிங்டன், 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்  கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ  2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. பல முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


அமெரிக்க அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில்  பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு பின் நாட்களில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டிரம்புக்கு கொரோனா பரிசோதனை, கடந்த சில வாரங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனை முடிவுகள் கொரோனோ நெகட்டிவ் என்றே வந்திருந்தன. 

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனையிலும் டிரம்புக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றும் அவருக்கு நெகட்டிவ் வந்துள்ளது என்றும் அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் மருத்துவர் கான்லி கூறினார்.  15 நிமிடங்களில் சோதனை முடிவுகள் வெளியாகியது. இதில் டிரம்ப் முழு ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் நோய் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கருப்பர் கொலையால் அமெரிக்காவில் 6-வது நாளாக போராட்டம்; வன்முறை
கருப்பர் கொலையால் அமெரிக்காவில் 6-வது நாளாக நடந்த போராட்டத்தில், வன்முறை வெடித்தது.
2. கருப்பர் சாவால் அமெரிக்காவில் போராட்டம் தீவிரம்; 25 நகரங்களில் ஊரடங்கு
போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கருப்பர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால், அமெரிக்காவில் போராட்டங்கள் தீவிரம் அடைகின்றன. 25 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
3. அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் - சீனா எச்சரிக்கை
பனிப்போரில் அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
4. கொரோனா வீரர்களுக்கு எதிரான தாக்குதலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் - பிரதமர் மோடி
கொரோனா வீரர்களுக்கு எதிரான தாக்குதலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
5. சீனா அச்சுறுத்தல் : இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் -அமெரிக்கா
சீனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து பங்காளியாக செயல்படும் என அமெரிக்கா கூறி உள்ளது.