உலக செய்திகள்

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது + "||" + Coronavirus global tally at 1.11 mn

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது.
ஜெனீவா, 

சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் செய்வது அறியாமல் உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் இன்று  11 லட்சத்தை தாண்டியது. இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்தது . உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 277,475- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில் மட்டும் பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: கோவா முதல் மந்திரி
கோவாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது, மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2. இந்தியாவில் 2-வது நாளாக 16 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இத்தாலியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,886 பேருக்கு தொற்று உறுதி
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28.68 லட்சத்தை கடந்தது.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: இன்று புதிதாக 16,738 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரான்சில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 31,519 பேருக்கு தொற்று உறுதி
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.