அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,200 பேர் கொரோனா வைரசால் உயிரிழப்பு


அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,200 பேர் கொரோனா வைரசால் உயிரிழப்பு
x
தினத்தந்தி 6 April 2020 4:50 AM GMT (Updated: 6 April 2020 4:50 AM GMT)

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,200 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

வாஷிங்டன்,

கொரோனாவின் கோர தாண்டவத்தால் அமெரிக்கா விழிபிதுங்கி நிற்கிறது.  அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை  336,830 ஆக உள்ளது.  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது.  குறிப்பாக நியூயார்க் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கியது.

இதேபோல் நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் திணறி வருகின்றன. அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1200 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி மொத்த பலி எண்ணிக்கை 9,618 ஆக உள்ளது. 

Next Story