உலக செய்திகள்

கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் + "||" + Coronavirus Weak Spot Possibly Identified

கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்

கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்

கொரோனா வைரஸின் உடலில், மருந்துகளால் எளிதில் தாக்கப்படுவதற்கேற்ற ஒரு குறிப்பிட்ட பகுதியை அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் உடலை ஆராய்ந்த அறிவியலாளர்கள், அவரது உடல் சார்ஸ் நோய்க்கு எதிராக உருவாக்கியிருந்த ஒரு ஆன்டிபாடியை ட்ராக் செய்தபோது, அது சார்ஸ் வைரஸின் ஒரு குறிப்பிட்ட பகுதி வழியாக உள்நுழைவதைக் கண்டறிந்தனர்.அதேபோல் அந்த ஆன்டிபாடி கொரோனா வைரஸ் உடலில் எந்த பகுதியில் சென்றமர்கிறது என்பதையும் அந்த அறிவியலாளர்கள் கண்டறிந்தார்கள்.

சார்ஸ் கிருமி மீது சென்றமர்ந்ததுபோல் வலிமையாக அந்த ஆன்டிபாடி கொரோனா வைரஸ் மீது அமரவிட்டாலும், எந்த பகுதி கொரோனா வைரஸின் உடலில் வலிமையற்றதாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க அது உதவியது. இந்த கண்டுபிடிப்பு, கொரோனா வைரஸின் உடலில் எந்த பகுதியை மருந்துகள் கொண்டு தாக்கலாம் என்பதை அறிய உதவியுள்ளது.

அந்த பகுதிதான் கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ என்று கூறலாம் என்கிறார் டடர் அயன் வில்சன் என்ற ஆய்வாளர்.இந்த கண்டுபிடிப்பு, கொரோனா வைரஸின் உடல் அமைப்பைக் கண்டுபிடிக்கவும் உதவியுள்ளதால், அதன் மூலம், கொரோனாவுக்கான தடுப்பூசியை வடிவமைக்கவும் அது உதவும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் - வவ்வால் பெண்மணி எச்சரிக்கை
கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் என வவ்வால் பெண்மணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
2. 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு
கடந்த 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
3. அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் இருந்து தனது குடிமக்களை அனுப்ப சீனா முடிவு
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சீனா தனது குடிமக்களை இந்தியாவில் இருந்து அனுப்ப முடிவு செய்து உள்ளது.
4. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்
காயமுற்ற தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை அழகிய சாதனை என இவான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்
5. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்
உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில். பரிதவிக்கும் தொழிலாளர்கள்.